திருப்பூர் மாவட்டம் உடுமலை தளி ரோடு ரயில்வே மேம்பாலம் அருகில், மதுரையிலிருந்து கோவை நோக்கிச் சென்று கொண்டிருந்த ரயில், எதிர்பாராத விதமாக ரயில் பாதையை கடக்க முயன்ற ஒருவர் மீது மோதியது. இந்த கோர விபத்தில் அந்த நபர் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த துயரச் சம்பவம் உடுமலை பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பழனி ரயில்வே காவல்துறையினர் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.