அதில் தேங்கும் தண்ணீர் வனவிலங்குகளின் தாகத்தை தீர்த்து வருவதுடன் நிலத்தடி நீர் இருப்பையும் உயர்த்தி வருகிறது. இந்த சூழலில் முறையான அனுமதி பெறாமல் கடந்த சில நாட்களாக இரவு நேரத்தில் சீதாமடை குட்டையில் தேங்கியுள்ள கனிம வளங்களை கடத்தும் பணியில் ஆசாமிகள் ஈடுபட்டு வருவதாக தெரிகிறது. இதனால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுவதுடன் அரிய வகை உயிரினங்கள் அழிவை சந்திக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது என சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு தெரிவித்து வருகின்றனர்.
கடந்த சில நாட்களாக இரவு நேரத்தில் கனிம வளத்தையும் கொள்ளையடித்து சென்றுள்ளனர். இதுகுறித்து வருவாய் துறை மற்றும் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தும் அலட்சியம் காட்டி வருவதாக பொதுமக்கள் தரப்பில் மாவட்ட ஆட்சியருக்கு மனு அனுப்பப்பட்டுள்ளது.