திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள தாகூர் மாளிகையில் கலை பண்பாட்டுத்துறை சார்பில் மாவட்ட அரசு இசைப்பள்ளி அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நாளை (டிசம்பர் 27)மாலை 4 மணி அளவில் நடைபெற உள்ளது. விழாவில் அமைச்சர்கள் சாமிநாதன், கயல்விழி, பொள்ளாச்சி எம்பி மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொள்ள உள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை உடுமலை நகராட்சி நிர்வாகம் செய்து வருகின்றது.