திருப்பூர் மாவட்டம் உடுமலை சுற்றுப்பகுதி பகுதிகளில் விவசாயம் பிரதானமாக உள்ளது. இந்த நிலையில் உடுமலை பொள்ளாச்சி பிரதான சாலையில் தளிரோடு உட்பட பல்வேறு பகுதிகளில் வைக்கோல் மற்றும் சோளத்தட்டுகளை அதிகளவு லாரிகளிலும் வாகனங்களிலும் ஏற்றிச் செல்வதால் வாகன ஓட்டிகள் கடும் பாதிப்பு அடைந்து வருகின்றனர். எனவே, போக்குவரத்து காவல்துறையினர் ஆய்வு செய்து, அதிகளவு சோளத்தட்டுகளை ஏற்றிச் செல்லும் விவசாயிகளுக்கு அறிவுரை மற்றும் விழிப்புணர்வை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.