திருப்பூர் உடுமலையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் 78வது பிறந்த நாளை முன்னிட்டு, சுமார் 2000-க்கும் மேற்பட்டோருக்கு பரிசுப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ள ஏழைக் குடும்பத்தினருக்கு ரூ.10,000 கருணைத்தொகை மற்றும் வேலையில்லா பட்டதாரிகளுக்கு ஊக்கத்தொகை உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளதாக முன்னாள் அமைச்சர் உடுமலை கே. ராதாகிருஷ்ணன் பேசினார்.