உடுமலை அருகே மதுரை வீரன் கோயில் திருவிழா

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே குரல் குட்டை ஊராட்சிக்குட்பட்ட மலையாண்டி பட்டணம் கிராமத்தில் மதுரைவீரன் பொம்மியம்மாள் வள்ளியம்மாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் திருக்கல்யாண விழா மூன்றாம் நாள் விழாவாக கடந்த மாதம் 27ஆம் தேதி நோன்பு தொடங்கியது. இந்த நிலையில் இன்று முக்கிய நிகழ்வான திருக்கல்யாணம் நடைபெற்றது. மதுரைவீரனுக்கு சந்தனம், பன்னீர், மஞ்சள், இளநீர் உட்பட பதினாறு வகையான பொருட்களைக் கொண்டு அபிஷேகம் நடைபெற்றது. ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் மேற்கொண்டனர்.

தொடர்புடைய செய்தி