உடுமலை அருகே லாரி ஜேசிபி எந்திரம் பறிமுதல்

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே வளையம்பாளையம் கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான நிலத்தில் முறையான அனுமதி இன்றி கிராவல் மண் எடுக்கப்படுவதாக பொதுமக்கள் கனிமவளத்துறை அதிகாரியிடம் புகார் அளித்தனர். இதன் பேரில், சேலம் மண்டல கனிமவளத்துறை இயக்குனர் இளங்கோவன் தலைமையில் பறக்கும் படையினர் ஆய்வு மேற்கொண்டனர். அனுமதியின்றி மண் அள்ளி கொண்டிருந்த லாரி மற்றும் ஜேசிபி இயந்திரத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து தளி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

தொடர்புடைய செய்தி