உடுமலை வனச்சரக அலுவலகத்தில் நீதிபதி விசாரணை

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே குருமலை கிராமத்தைச் சேர்ந்த மாரிமுத்து என்பவர் புலி நகம் வைத்து இருந்ததாக நேற்று முன்தினம் கைது செய்யப்பட்ட நிலையில், நேற்று கழிவறையில் தற்கொலை செய்துகொண்டதாக வனத்துறையினர் தெரிவித்தனர். 

இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், உடுமலை குற்றவியல் நீதித்துறை நீதிமன்ற நீதிபதி நித்தியகலா நேற்றிரவு வனச்சர அலுவலகத்தில் வனத்துறையினரிடம் விசாரணை மேற்கொண்டார்.

தொடர்புடைய செய்தி