திருப்பூர் உடுமலை அருகே பெரிய வாளவாடியில் முக்கோணம் உள்ளிட்ட கிராமங்களில் முகூர்த்த சீசனை இலக்கு வைத்து செண்டுமல்லி பூ சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். குறுகிய காலத்தில் முகூர்த்த சீசனில் இலக்காக வைத்து கோழிக் கொண்டை சாகுபடி செய்து வருகின்றனர். ஏக்கருக்கு 3000 கிலோ வரை செண்டு மல்லி பூ அறுவடை செய்யலாம். மேலும் தோட்டக்கலைத் துறையினர் உரிய வழிகாட்டுதல் வழங்க வேண்டும் என விவசாயிகள் தெரிவித்தனர்.