திருப்பூர் உடுமலை அரசு கலைக் கல்லூரியில் இன்று கௌரவ விரிவுரையாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி வழங்க வேண்டிய 57,800 ரூபாய், மகப்பேறு விடுப்பு, ஓய்வு பெற்ற விரிவுரையாளர்களுக்கு 24 லட்சம் ரூபாய் பணிக்கொடை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான கௌரவ விரிவுரையாளர்கள் பங்கேற்றனர்.