திருப்பூர் மாவட்டம் உடுமலை பழனி தேசிய நெடுஞ்சாலையில் பாலப்பம்பட்டி என்னும் இடத்தில் புறவழிச் சாலை சந்திக்கின்றது. இங்கு ஏராளமான வாகனங்கள் சந்திக்கும் நிலையில் உயர்மின் கோபுர விளக்குகள் இரண்டு அமைக்கப்பட்டுள்ளன. இவை தற்போது போதிய பராமரிப்பு இல்லாமல் காட்சி பொருளாக உள்ளன. இதனால் இரவு நேரத்தில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அரசு கோபுர விளக்குகளை பழுதுபார்க்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.