திருப்பூர் மாவட்டம் உடுமலை - மூணாறு சாலை அடர்ந்த வனப் பகுதியில் அமைந்துள்ளது. இந்த சாலை வழியாக ஏராளமான சுற்றுலாப் பயணிகள் சென்று வருகின்றனர். இருப்பினும், கேரள மாநில எல்லை வரை சாலை மிகவும் குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இதனால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே, தமிழக முதல்வர் சாலை சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.