உடுமலையில் வெளுத்து வாங்கிய கனமழை

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இன்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பின்னர், அரை மணி நேரத்திற்கும் மேலாக இடைவிடாமல் கனமழை பெய்தது. இதனால், கடும் வெப்பத்தால் தவித்து வந்த பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும், கடந்த சில வாரங்களாக கடுமையான வெயில் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விவசாயப் பணிகளை விவசாயிகள் இன்று மாலை முதல் துவக்கினர்.

தொடர்புடைய செய்தி