திருப்பூர் மாவட்டம் உடுமலை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில தினங்களாக நிலவி வந்த கடுமையான வெப்பத்தால் பகல் மற்றும் இரவு நேரங்களில் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வந்தனர். இந்த நிலையில், இன்று (ஜனவரி 11) உடுமலை நகராட்சிப் பகுதிகளில் அதிகாலை முதல் விட்டு விட்டு சாரல் மழை பெய்து வருகிறது. இதனால், கடுமையான வெப்பத்தால் அவதிப்பட்டு வந்த பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.