திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இன்று உடுமலை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அவ்வப்போது சாரல் மழை முதல் கன மழை வரை பெய்து வந்தது. தற்போது உடுமலை நகரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சாரல் மழை பெய்து வருகின்றது. இதனால், கடந்த சில தினங்களாகக் கடுமையான வெப்பத்தால் தவித்து வந்த பொதுமக்கள் தற்போது பெய்து வரும் சாரல் மழையால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும், சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் விவசாயிகள் விவசாயப் பணிகளைத் துவக்கி உள்ளனர்.