உடுமலையில் 27ஆம் தேதி குறைதீர் கூட்டம்!

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் உள்ள சீனிவாசா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அலுவலகம் மற்றும் தொழிலாளர் அரசு காப்பீட்டு கழகம் சார்பில், பங்குதாரர்களின் குறைகளை நிவர்த்தி செய்யும் வகையில் குறைதீர் கூட்டம் வரும் 27-ம் தேதி நடைபெறும். தொழிலாளர் வருங்கால மண்டல வகுப்பின் ஆணையாளர் அபிஷேக் ரஞ்சன் இதைத் தெரிவித்துள்ளார். இந்த முகாமில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி உறுப்பினர்கள், தொழிலாளர்கள், அரசு காப்பீட்டு அதிகாரிகள், முதலாளிகள், ஓய்வூதியர்கள், தொழிற்சங்கத்தினர் ஆகியோர் தங்களது குறைகள் மற்றும் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை முறையிடலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி