உடுமலை அருகே பச்சை மிளகாய் விலை உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே குமாரலிங்கம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பச்சை மிளகாய் சாகுபடி செய்யப்படுகிறது. தற்போது ஒரு கிலோ பச்சை மிளகாய் விவசாயிகளிடம் இருந்து ரூ.55க்கு கொள்முதல் செய்யப்படுகிறது. ஒரு ஏக்கரில் சராசரியாக 8000 முதல் 10,000 கிலோ வரை மகசூல் கிடைக்கிறது. மிளகாய்க்கு நல்ல விலை கிடைப்பதால், சந்தையில் விலை வீழ்ச்சி அடையாமல் தொடர வேண்டும் என்றும், உற்பத்தி செலவுகள் கட்டுப்பாட்டில் இருக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி