உடுமலை அருகே அரசு பள்ளி மாணவிக்கு குவியும் பாராட்டு

திருப்பூர் உடுமலை அருகே பூளவாடி அரசு மேல்நிலைப் பள்ளியில் தனது மகள்களை பள்ளிக்கு விட வந்த கோபிநாத் என்பவர், தனது 5000 ரூபாய் மற்றும் ஆறு அசல் ஆவணங்கள் அடங்கிய கைப்பையை சாலையில் தவறவிட்டுச் சென்றார். அந்த வழியாகச் சென்ற 12-ம் வகுப்பு மாணவிகளான சாமுண்டீஸ்வரி மற்றும் மதுமிதா ஆகியோர் அந்தப் பையைக் கண்டெடுத்து, பள்ளி ஆசிரியர் மூலம் தலைமை ஆசிரியரிடம் ஒப்படைத்தனர். பின்னர், அந்தப் பை உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டது. மாணவியரின் நேர்மையைப் பலரும் பாராட்டினர்.

தொடர்புடைய செய்தி