உடுமலையில் அரசு ஊழியர் சங்கம் நூதன ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில், பெட்ரோல் மற்றும் கேஸ் விலை உயர்வை கண்டித்து அரசு ஊழியர் சங்கத்தினர் பாடகட்டி சிலிண்டிற்கு மாலை அணிவித்தும், டூவீலரை கயிறு கட்டி இழுத்தும் பேரணியாக வட்டாட்சியர் அலுவலகம் வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. இந்த நிகழ்வில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க நிர்வாகிகள், மாநில மற்றும் மாவட்ட உடுமலை வட்டக்கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி