உடுமலையில் இலவச மருத்துவ முகாம்- எம்எல்ஏ துவக்கி வைப்பு!!

திருப்பூர் மாவட்டம் உடுமலை பெரியகோட்டை ஊராட்சியில் உடுமலை அபெக்ஸ் சங்கம், சிவசக்தி காலனி விரிவாக்கம் குடியிருப்பு நலச்சங்கம் மற்றும் கற்பகம் மருத்துவமனை கோவை இணைந்து மாபெரும் இலவச மருத்துவ முகாம் நடத்தியது. பொது மருத்துவம், கண் மருத்துவம் உள்ளிட்ட முக்கிய பிரிவுகளில் மருத்துவர்கள் பங்கேற்றனர். உடுமலை சட்டமன்ற உறுப்பினர் உடுமலை கே. ராதாகிருஷ்ணன் இந்த முகாமை துவக்கி வைத்தார். இதில் 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர். உடுமலை அப்பெக்ஸ் சங்க நிர்வாகிகள் மற்றும் குடியிருப்பு நலச்சங்க நிர்வாகிகள் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி