திருப்பூர் மாவட்டம் உடுமலை அரசு கலைக் கல்லூரியில் இன்று, இளநிலை இரண்டாம் ஆண்டு பயிலும் 723 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் பொள்ளாச்சி எம்பி ஈஸ்வர சாமி, கல்லூரி முதல்வர் சிவக்குமார், உடுமலை நகர திமுக நிர்வாகிகள் மற்றும் மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வு மாணவர்களின் கல்விக்கு பேருதவியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.