இதுகுறித்து தனியார் பட்டுப்புழு மையத்தில் கேட்டால் அரசு வித்தகத்தில் இருந்து தான் வாங்கப்படுகின்றது நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது என கையை விரிக்கும் நிலையில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு பல லட்சம் இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் உரிய நிவாரணம் வழங்க கோரி உடுமலையில் உள்ள மத்திய பட்டு வளர்ப்பு ஆராய்ச்சி மையம் முன்பு பட்டுப்புழுக்களுடன் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தனியார் பட்டுப்புழு மையத்தில் விவசாயிகள் புழுக்கள் உற்பத்தி செய்து வரும் நிலையில் தற்போது தரமற்ற முட்டைகளால் புழுக்கள் உயிரிழந்து வருகின்றன. பட்டு புழு வளர்ப்பு மையங்களில் முறையாக கண்காணிக்க வேண்டிய மத்திய பட்டு வளர்ப்பு ஆராய்ச்சி மையம் கண்காணிக்காமல் இருந்த காரணத்தால் தற்போழுது புழுக்கள் தொடர்ந்து இறந்து வருகின்றன என உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.
தோல்வியுடன் ஓய்வு பெற்றார் WWE ஜாம்பவான் ஜான்சீனா