உடுமலை: காட்டுப்பன்றி தாக்கி விவசாயி படுகாயம்

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே ஜிலேபி நாயக்கன் பாளையம் பகுதியில் நேற்று இரவு உடையார் தோட்டம் கருப்புசாமி கவுண்டர் மகன் சிவராஜ் இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையின் குறுக்கே திடீரென வந்த காட்டுப்பன்றி வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளாகியது.

பின்னர் காட்டுப்பன்றி சிவராஜை 5க்கும் மேற்பட்ட இடங்களில் தாக்கியதில் படுகாயம் அடைந்தார். இதற்கிடையில் தற்போழுது கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த பகுதியில் காட்டுப்பன்றிகள் நடமாட்டம் அதிகம் உள்ளதால் விவசாயிகள் காட்டுப்பன்றிகளை வனப்பகுதிக்குள் விரட்ட வலியுறுத்தி உள்ளனர்.

தொடர்புடைய செய்தி