உடுமலையில் தூய்மை பணியாளர்களுக்கு கண் பரிசோதனை முகாம்

திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சியில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு இன்று கண் பரிசோதனை முகாம் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. முகாமினை நகராட்சி ஆணையாளர் சரவணகுமார் துவக்கி வைத்தார். முகாமில் அரவிந்த் கண் மருத்துவமனை மருத்துவர்கள் கலந்து கொண்டு தூய்மை பணியாளர்களுக்கு கண் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. கண் புரை, கண் அறுவை சிகிச்சை தேவைப்படுபவர்களுக்கு இலவச கண் கண்ணாடிகள் வழங்கப்பட்டன. முகாமில் 200க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி