உடுமலையில் தொழில் முனைவோர் பயிற்சி நிறைவு விழா

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் மத்திய, மாநில அரசின் தொழில் முனைவோர் பயிற்சி மற்றும் 3 மாத ஆரி ஒர்க் பயிற்சி நிறைவு விழா இன்று நடைபெற்றது. சாரக் டிரஸ்ட் சார்பில் நடைபெற்ற இந்த விழாவில், நிறுவனர் சாமிநாதன் தலைமை தாங்கினார். பொருளாளர் கவிதா தொகுப்புரை வழங்க, நிர்வாக இயக்குனர் ராமசாமி தொழில் முனைவோருக்கு சான்றிதழ்களை வழங்கினார். இந்த நிகழ்வில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி