இந்த நிலையில் மதுரை ஆரப்பாளையம் பஸ் நிலையத்தில் ஏற்பட்ட நிகழ்வில் தாராபுரம் கிளை டிரைவர் கணேசனை மதுரை அரசு போக்குவரத்துக் கழக கிளை மேலாளர் செருப்பால் அடித்ததாகத் தெரிகிறது. இதற்குக் கண்டனம் தெரிவித்து அனைத்துத் தொழிற்சங்கங்களைச் சேர்ந்த டிரைவர் மற்றும் கண்டக்டர்கள் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக கிளை கழகங்கள் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக இன்று (ஜூன் 10) உடுமலை கிளை அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது அரசு பஸ் டிரைவரை தாக்கிய மேலாளரை வன்கொடுமை சட்டத்தில் கைது செய்வதுடன் அவரை உடனடியாகப் பணிநீக்கம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி நிர்வாகிகள் பேசினார்கள்.
இந்த நிகழ்வில் அனைத்து அதிமுக தொழிற்சங்கம் நிர்வாகிகள் சதீஷ்குமார், தங்கவேல், மகாலிங்கம், காடேஸ்வரர், மகேந்திரன் மற்றும் திமுக சிஐடியு உட்பட அனைத்துத் தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.