திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே கணபதிபாளையம் ராகல் பாவி உட்பட பல பகுதிகளில் பீட்ரூட் ஆண்டு முழுவதும் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் தற்போழுது சீசன் சமயங்களில் குறைந்த விலையில் விதை மற்றும் நடுவதில் சிக்கல் நீடிக்கிறது. எனவே தோட்டக்கலைத் துறை வாயிலாக சீசன் சமயங்களில் மானிய விலையில் விதை மற்றும் நடுவதற்கு வழங்க வேண்டும். மேலும் மதிப்புக்கூட்டி விற்பனை செய்ய பயிற்சி மற்றும் தொழில்நுட்பங்களை தோட்டக்கலைத் துறை வழங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.