திருப்பூர் மாவட்டம் உடுமலையில் அருள்மிகு மாரியம்மன் கோவில் தேர் திருவிழா கடந்த 24 ஆம் தேதி நோன்பு சாட்டுதலுடன் துவங்கியது. இன்று (ஏப்ரல் 9) மாலை 4 மணிக்கு முக்கிய நிகழ்வான தேரோட்டம் நடைபெற உள்ளது. இதற்காக பாலக்காட்டில் இருந்து மணிகண்டன் என்ற யானை உடுமலைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. தற்போது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால், உடுமலையில் தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் முறையான அனுமதி பெற்று யானை வரவழைக்கப்பட்டுள்ளது.