உடுமலை - மூணாறு சாலையில் யானை வீடியோ வைரல்

திருப்பூர் அருகே உடுமலை-மூணாறு சாலையில், கோடை விடுமுறையையொட்டி சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் மூணாறு, மறையூர், காந்தளூர் பகுதிகளுக்குச் சென்று வருகின்றனர். இந்நிலையில், புங்கன் ஓடை அருகே ஒற்றை யானை சாலையில் நடமாடியதால், வாகன ஓட்டிகள் சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக பாதிக்கப்பட்டனர். யானை வனப்பகுதிக்குள் சென்ற பிறகு சுற்றுலாப் பயணிகள் நிம்மதி அடைந்தனர். இந்த சம்பவம் குறித்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி