உடுமலை கால்வாயில் விழுந்து முதியவர் தற்கொலை

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே திருமூர்த்தி நகர் சாம்பல் மேடு பகுதியில் சேர்ந்த ஆறுமுகம் சில தினங்களாக உடல் நலம் சரியில்லாமல் மனம் உடைந்து காணப்பட்டார். இந்த நிலையில் காண்டூர் கால்வாயில் தற்கொலை செய்து கொண்டார். சம்பவ இடத்துக்கு வந்த தளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். பின்னர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக உடுமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்புடைய செய்தி