திருப்பூர் தெற்கு மாவட்டம் உடுமலைப்பேட்டையில் போதை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு இன்று விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. உடுமலை பழைய பேருந்து நிலையம் காமராஜர் சிலை அருகில் தொடங்கி மத்திய பேருந்து நிலையம் வரை நடைபெற்ற இந்த பேரணியில், உடுமலை காவல்துறை, ஸ்ரீ ஜி.வி.ஜி. விசாலாட்சி மகளிர் கல்லூரி மற்றும் எண்ணம் போல் வாழ்க்கை அறக்கட்டளை நிர்வாகிகள் கலந்துகொண்டனர். போதைப்பொருள் பழக்கத்திற்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இதன் முக்கிய நோக்கமாகும்.