திருப்பூர் மாவட்டம் உடுமலை ஒன்றியம் சின்ன வீரம்பட்டி ஊராட்சியில் நடைபெற்று வரும் சிறப்பு வாக்காளர் திருத்த முகாம்களை மாவட்ட ஆட்சியர் மனிஷ் நாரண வரே இன்று ஆய்வு செய்தார். முகாம்களில் இதுவரை வருகை புரிந்த வாக்காளர்கள் மற்றும் வராதவர்கள் குறித்து அவர் கேட்டறிந்தார். இந்த ஆய்வின் போது உடுமலை வரவை கோட்டாட்சியர் குமார், தாசில்தார் கௌரி சங்கர் மற்றும் பலர் உடனிருந்தனர்.