உடுமலையில் மாற்றுத்திறனாளிகள் கண்டன ஆர்ப்பாட்டம்!

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்பு உரிமைகளுக்கான சங்கம் சார்பில், உதவித்தொகையை உயர்த்தி கோரி சென்னையில் போராடிவரும் மாற்றுத்திறனாளிகளை மிரட்டி வரும் காவல்துறையை கண்டித்தும், சங்கத்தின் ஜான்சி ராணியை தாக்கியதை கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கத் தலைவர் மாலினி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், நிர்வாகிகள் ஜெகதீசன், கனகராஜ், புரட்சி நாதன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

தொடர்புடைய செய்தி