திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சிக்குட்பட்ட தில்லை நகரில் உள்ள ரத்தின லிங்கேஸ்வரர் திருக்கோவிலில் ஐப்பசி மாத பௌர்ணமி முன்னிட்டு அன்னாபிஷேகம் நடைபெற்றது. இதில் பயிர், பால், சந்தனம், விபூதி போன்ற பல்வேறு அபிஷேகங்கள் நடைபெற்றன. பின்னர் அன்னத்தினால் அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபராதணை நடைபெற்றது. தொடர்ந்து அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டனர்.