திருப்பூர் மாவட்டம் உடுமலை பேருந்து நிலையம் முன்பு சிஐடியு தொழிலாளர் நலக் கோரிக்கைகளை வலியுறுத்தி ஒன்றிய மாநில அரசுகளுக்கான கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. குறைந்தபட்ச ஊதியம் 26 ஆயிரம் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். ஜவுளிக் கொள்கை 2024 தொழிலாளர்கள் நலன் காக்க திட்டமிட வேண்டும். ஈஎஸ்ஐ சம்பள உச்சவரம்பை தளர்த்த வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. நிகழ்வில் ஈஸ்வரமூர்த்தி, பழனிச்சாமி, செல்வராஜ், ஜெயபிரகாஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.