உடுமலையில் இருசக்கர வாகனங்கள் ஏலம் விட முடிவு

திருப்பூர் உடுமலையில் நீதிமன்ற வழக்குகளில் தொடர்புடைய, உரிமை கோரப்படாத வாகனங்கள் உடுமலை காவல் நிலையம் முன்பு பல மாதங்களாக வைக்கப்பட்டிருந்தன. தற்போது இந்த வாகனங்கள் அரசுடைமை ஆக்கப்பட்ட நிலையில், வரும் 12ஆம் தேதி பொது ஏலத்திற்கு விடப்படும் என திருப்பூர் மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. ஏலம் எடுக்க விரும்புவோர் மாவட்ட எஸ்பி அலுவலகத்தை தொடர்பு கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி