உடுமலை பேருந்து நிலையத்தில் கூட்டம் அதிகரிப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை பகுதியில் வார விடுமுறை மற்றும் முகூர்த்த தினம் காரணமாக கோவைக்கு போதிய பேருந்துகள் இயக்கப்படாததால், உடுமலை பேருந்து நிலையத்தில் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இதனால் பல மணி நேரம் பொதுமக்கள் நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டது. விடுமுறை மற்றும் விசேஷ தினங்களில் கோவைக்கு கூடுதல் பேருந்துகள் இயக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

தொடர்புடைய செய்தி