திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே எலையமுத்தூர் ஊராட்சியில் அமராவதி ஆறு பகுதியில் உள்ள ஜம்புகள் ஓடை அமைந்துள்ளது. கடந்த சில தினங்களாகவே ஓடை பகுதியில் காலை மாலை நேரங்களில் முதலை ஒன்று பாறையில் படுத்து உறங்கி வருகின்றது.
எனவே பொதுமக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் முதலை நடமாடி வருவதால் வனத்துறையினர் உடனடியாக முதலை பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.