திருப்பூர் மாவட்டம் உடுமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கொப்பரை ஏலம் நடைபெற்றது. உடுமலை பகுதி விவசாயிகள் 99 மூட்டைகள், அதாவது 4950 கிலோ கொப்பரையை ஏலத்திற்கு கொண்டு வந்திருந்தனர். இதில் முதல் தர கொப்பரை ரூ. 180.61 முதல் ரூ. 210.50 வரையிலும், இரண்டாம் தர கொப்பரை ரூ. 85.76 முதல் ரூ. 165.72 வரையிலும் ஏலம் போனது.