உடுமலை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் கொப்பரை ஏலம்

திருப்பூர் மாவட்டம் உடுமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நேற்று இ நாம் திட்டத்தின் கீழ் கொப்பரை ஏலம் நடைபெற்றது. ஏலத்தில் 19 விவசாயிகள் 131 மூட்டை கொப்பரை கொண்டு வந்திருந்தனர். 8 வியாபாரிகள் முதல் தரம் ரூ. 230.50 முதல் ரூ. 240.50 வரையும், இரண்டாம் தரம் ரூ. 170 முதல் 221 ரூபாய் வரை ஏலம் விடப்பட்டது. நேற்று ஏலத்தில் பத்து லட்சத்து 84 ஆயிரத்து 636 ரூபாய் அளவில் வர்த்தகம் நடைபெற்றது.

தொடர்புடைய செய்தி