திருப்பூர் மாவட்டம் உடுமலை நகரை இரண்டாக பிரிக்கும் வழியில் ரயில்வே வழித்தடம் அமைந்துள்ளது. நகரில் தெற்கு பகுதியில் ராமசாமி நகர், அன்னபூரணி நகர் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. மேலும் அரசு கலைக் கல்லூரி, வட்டார போக்குவரத்து அலுவலகம், கோட்டாட்சியர் அலுவலகம் உள்ளிட்ட அலுவலகங்களுக்கு பொதுமக்கள் சென்று வருகின்றனர். இந்த நிலையில் ரயில்வே கேட் அடிக்கடி போடப்படுவதால், இங்கு ரயில்வே மேம்பாலம் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் தற்காலிகமாக சுரங்கப்பாதை ஒன்று அமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.