உடுமலை நகராட்சியில் காலை உணவு திட்டம் குறித்து புகார்

திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற சாதாரண கூட்டத்தில், முன்னாள் நகராட்சி தலைவரும் 33வது வார்டு திமுக உறுப்பினருமான வேலுச்சாமி, முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தில் தரமான உணவு வழங்கப்படுவதில்லை என்றும், அடிப்படை வசதிகள் செய்வதில் நகராட்சி அதிகாரிகள் அலட்சியமாக இருப்பதாகவும் குற்றம் சாட்டினார். இதனால், கவுன்சிலர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்புடைய செய்தி