திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இந்தியா கம்யூனிஸ்ட் கட்சி( மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) தாலுகா கமிட்டி கூட்டம் நடைபெற்றது. இதில், டிசம்பர் 12, 13, 14 தேதிகளில் தூத்துக்குடியில் நடக்கும் மாநில மாநாட்டை வெற்றியடையச் செய்வது, விவசாயிகளுக்கு ஆதரவாகப் போராடுவது, கட்சி உறுப்பினர்களை 1000 ஆக உயர்த்துவது, விஏஓ அலுவலகம் அமையப் போராடுவது, சாக்கடை நீர் கலப்பதைத் தடுக்கப் போராடுவது எனப் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அருணாச்சலம் தலைமை வகித்தார்.