உடுமலை அருகே தென்னை மரங்களுக்கு தீ வைப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே மைவாடி ஊராட்சி பகுதியில் பாண்டியன் என்ற சிறு விவசாயி 4.50 ஏக்கரில் தென்னை விவசாயம் செய்து வந்தார். நல்ல பலன் தரக்கூடிய நிலையில் இருந்த 100க்கும் மேற்பட்ட தென்னை மரங்களுக்கு மர்ம நபர்கள் தீ வைத்ததில் சுமார் 10 லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக மடத்துக்குளம் காவல் நிலையத்தில் விவசாயி புகார் அளித்துள்ளார். உரிய நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை விடுத்துள்ளார்.

தொடர்புடைய செய்தி