உடுமலை பட்டியலின இளைஞர்களை தாக்கிய 2-பேர் மீது வழக்கு

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே மானுப்பட்டி கிராமத்தில், மின் மோட்டார் ஒயர்களை திருடியதாகக் கூறி, கருப்புசாமி உட்பட இருவர் மீது ஐந்துக்கும் மேற்பட்டோர் கடுமையாகத் தாக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. இந்த சம்பவத்தை அடுத்து, அமராவதி நகர் காவல்துறையினர் தாக்குதலில் ஈடுபட்ட மணிகண்டன் மற்றும் கார்த்திக் ஆகிய இருவர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவர்களைத் தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி