திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே பாலப்பட்டி பகுதியில் பி. ஏ. பி கால்வாய் சேதமடைந்துள்ளதால், நான்கு வழி சாலையின் இருபுறமும் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக கால்வாயை ஆய்வு செய்து சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர். இந்த சேதத்தால் விவசாய பணிகள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.