உடுமலை அருகே தேவனூர் புதூரில் பஸ் ஸ்டாண்ட் அமைக்க கோரிக்கை

திருப்பூர் மாவட்டம் உடுமலை ஆனைமலை ரோட்டில் தேவனூர் புதூர் கிராமம் உள்ளது. கோவை மற்றும் திருப்பூர் மாவட்டம் எல்லையாக உள்ள இந்த பகுதியில் பொள்ளாச்சி மற்றும் உடுமலையிலிருந்து பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் இங்கு பேருந்து நிறுத்துமிடம் இல்லாத காரணத்தால் சாலையில் பயணிகளை இறக்கி விட்டு பேருந்துகள் நிற்பதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகின்றது. எனவே இங்கு பேருந்து நிறுத்துமிடம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

தொடர்புடைய செய்தி