உடுமலை அருகே பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்

திருப்பூர் மாவட்டம் உடுமலை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட குடிமங்கலம் மேற்கு ஒன்றியம், பெதப்பம்பட்டி, கொங்கல் நகரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இன்று அதிமுக சார்பில் பூத் கமிட்டி கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், உடுமலை சட்டமன்ற உறுப்பினர் உடுமலை கே. ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டு ஆலோசனைகளை வழங்கினார். அவருடன் குடிமங்கலம் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்பர்ராஜன் ராமநாதன், மாவட்ட இணைச்செயலாளர் அம்மாபட்டி துரைசாமி, மாவட்ட பாசறை செயலாளர் பிரகாஷ் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி