திருப்பூர் மாவட்டம் உடுமலை அமராவதி வன சரகங்களில் இன்று ஒருங்கிணைந்த நிலவால் பறவைகள் கணக்கெடுப்பு பணி நடைபெற்றது. கல்லாபுரம், மானுப்பட்டி உள்ளிட்ட நீர்நிலைகள் மற்றும் பாலம் பகுதியில் தையல் சிட்டு, கரிச்சான், மாங்குயில், சிலம்பம் மற்றும் காகம் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட பறவை இனங்கள் கணக்கெடுப்பில் பதிவு செய்யப்பட்டன. இந்த நிகழ்வில் வனத்துறையினர் மற்றும் தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.