திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே பஞ்சலிங்க அருவி நீர்பிடிப்பு பகுதிகளான குருமலை, குழிப்பட்டி, ஜல்லிமுத்தான் பாறை பகுதிகளில் பெய்து வரும் மழையால் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இன்று விடுமுறை தினம் என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் அருவிக்கு வந்திருந்தனர். ஆனால், பாதுகாப்பு கருதி அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டதால், சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.